விவசாயிகள் போராட்டம்: இன்று 61வது நாள்

617

டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், பேரணியில் பங்கேற்பதற்காக வெளிமாநிலங்களில் இருந்து இரவு நேரத்திலும் டிராக்டர்கள் வந்த வண்ணம் இருந்தன.

டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர். விவசாயிகள் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர். போலீஸ் அனுமதியை அடுத்து சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது எவ்வளவு தூரத்துக்கு பேரணி நடத்துவது, எந்த வழியாக பேரணி செல்வது என்று முடிவு செய்தனர்.

அதன்படி தற்போது விவசாயிகள் முகாமிட்டு இருக்கும் காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக டெல்லிக்குள் நுழைவது. அதன்பிறகு 5 முனைகளில் இருந்தும் பேரணியை தொடங்குவது என்று முடிவு செய்தனர். சிங்கு, திக்ரி, காசிப்பூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 முனைகளில் இருந்தும் டிராக்டர்கள் டெல்லி நகருக்குள் செல்ல உள்ளன. இந்த பேரணியில் பங்கேற்பதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து இரவு நேரத்திலும் டிராக்டர்கள் வந்த வண்ணம் இருந்தன.

Advertisement