“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..!

1621

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பு பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இதனிடையே டிராக்டர் பேரணியின்போது விவசாய சங்க பிரதிநிதிகள் 4 பேரை சுட்டுக் கொலை செய்து, பேரணிக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு ஒரு சதித்திட்டத்தை தீட்டியதாக ஒருவரை பிடித்து விவசாயிகள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

முகத்தை மறைத்திருந்த நபர், விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது இடையூறு விளைவிக்க திட்டம் தீட்டியிருந்ததாக கூறுகிறார்.

Advertisement