களிமண் பொம்மைகள் தயாரிக்கும் கலைஞர்களோடு இணைந்து மாணவர்கள் சிறப்பு முகாம்

1116

நவீன காலத்துக்கு ஏற்ப புதுவிதமான களிமண் பொம்மைகள் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்களோடு இணைந்து, Fashion Technology மாணவர்கள், புதுச்சேரியில் சிறப்பு முகாம் நடத்தினர்.

புதுச்சேரி கணுவாப்பேட்டை கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் பழமையான களிமண் பொம்மைகளை தயாரிக்கும் பணியில் கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நலிந்து வரும் இந்தத் தொழிலை பாதுகாக்கும் பொருட்டு, சென்னை National Institute of Fashion Technology இறுதி ஆண்டு மாணவர்கள், கைவினைக் கலைஞர்களோடு இணைந்து சிறப்பு பயிற்சி முகாமில் ஈடுபட்டனர்.

இதில் நவீன காலத்திற்கு ஏற்ப, வர்த்தகத்திற்கு உகந்த புதிய விதமான பொம்மைகளை தயாரிக்க பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் தேசிய விருதாளர் முனுசாமி மற்றும் இறுதி ஆண்டு பயிலும் Fashion Technology மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of