மகன் காதலித்த பெண்ணையே சீரழித்த தந்தை..! பரபரப்பு சம்பவம்..!

818

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் கண்ணன். இவரும், நாலுவேதபதி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள நினைத்து, தங்கள் காதல் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். முகேஷ் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில், அந்த பெண்ணின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இந்நிலையில் முகேஷின் தந்தை கருப்பு நித்தியானந்தம் பெண் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேச நினைத்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர், அவரிடம் பேச முன்வரவில்லை.

இதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் எப்படியோ பேசிய அவர், நான் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். நம்பிக்கையிருந்தால் என்னோடு வா என்று கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த பெண்ணும், கருப்பு நித்யானந்தத்துடன் சென்றிருக்கிறார். போகும் வழியில் தான் அந்த பெண்ணிற்கு, கருப்பு நித்யனந்தத்தின் உண்மையான முகம் தெரிந்தது.

போகும் வழியில் அந்த இளம் பெண்ணை அவர் வன்கொடுமை செய்துவிட்டு, அவரிக்காடு கிராமத்தில் உள்ள அவரது நண்பன் சக்திவேலின் வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார்.மேலும், இனிமேல் நீ என்னுடன் தான் வாழ வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார்.

இதையடுத்து தனது மகனிடம், அந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துக்கொண்டார் என்று கூறியிருக்கிறார்.பின்னர் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து தப்பித்த வந்த அந்த இளம்பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கருப்பு நித்யனந்தம், அவரது நண்பர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி அம்சரவல்லி ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement