அப்பா – மகன் – தயாராகிறதா புதிய காம்பினேஷன் ?

362

தொடக்க காலத்தில் பல தோல்விகளை சந்தித்தாலும், தடைகள் தாண்டி உச்சம் தொட்ட பல நடிகர்களில் விக்ரம் குறிப்பிடத்தக்கவர். சினிமாவிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட விக்ரம் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது அடுத்த தலைமுறை நடிகராக களமிறங்குகிறார் விக்ரம் அவர்களின் மகன் துருவ். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது படத்தின் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் தந்தையும் மகனும். மேலும், பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தந்தையும், மகனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் ஒருவர் சொன்ன கதை அப்பாவையும், மகனையும் கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of