கணவனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தற்கொலை செய்துக் கொண்ட தந்தை..

302

ஆந்திராவில் மகளுக்கு நேர்ந்த துயரத்தால் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகள்களும் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்தவர் பாபு ரெட்டி. இவரது மூத்த மகள் ஸ்வேதாவுக்கு திருமணமான நிலையில், அவரது கணவர் சுரேஷ்குமார், தினமும் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மகளுக்கு நேர்ந்த கொடுமையால் மன உளைச்சலில் இருந்த பாபு ரெட்டி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது மரணத்துக்கு மருமகன் சுரேஷ்குமார் தான் காரணம் என வீடியோ பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தந்தையின் மரணத்தை அறிந்த மகள்கள் இருவரும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மருமகன் சுரேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement