குடும்ப பிரச்சனையால் தனது இரண்டு மகள்களையும் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை

297
vellore

வேலூர் அருகே குடும்ப பிரச்சனையால் தனது இரண்டு மகள்களையும் கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே உள்ள மேல்மொனவூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு கமலா என்ற மனைவியும், மேகலா, திவ்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். வெங்கடேசனுக்கும், கமலாவுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. கமலா கீரை வியாபாரம் செய்வது வெங்கடேசனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேஷ், நேற்று தனது இரண்டு மகள்களையும், கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வியாபாரத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கமலா மூன்று பேரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.