மருமகளுக்கு மாமனார் செய்த உதவி – வைரலாகும் புரட்சிகர செயல்!

994

கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா. இவருக்கும், மதவாவு என்பவருக்கும் இடையே கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.

இருவரின் வாழ்க்கையும் சந்தோசமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், சுசீலாவின் கணவர் சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் கர்ப்பமாக இருந்த சுசீலாவின் வாழ்க்கை சோகத்தில் மூழ்கிய நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மருமகளின் வாழ்க்கை இப்படி சீரழிந்து விட்டது என்று சோகத்தில் இருந்த மாமியார் மற்றும் மாமனார், அவருக்கு மறுமணம் செய்து வைக்கு முடிவு செய்தனர். முதலில் இதற்கு ஒத்துக்கொள்ள சுசீலா, மாமனார் மற்றும் மாமியாரின் வற்புறுத்தலுக்கு பிறகு ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சுசீலாவுக்கு, ஜெயபிரகாஷ் என்பவருடன் சுமூகமாக திருமணம் நடைபெற்றுள்ளது. புரட்சிகரமான மாமியார் மற்றும் மாமனாரின் இந்த செயல், இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of