கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பெண்..! மாமனார் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

395

உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணின் மாமனார், தனது மருமகளுக்கு கொடுத்த தண்டனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவருக்கும், அப்துல் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு, அப்துல் சவுதி அரேபியாவிற்கு பணி காரணமாக சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த பெண், தனது மாமியார் மற்றும் மாமனாருடன் வசித்து வந்தார். அப்போது, 23 வயது வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், சம்பவத்தன்று அந்த வாலிபர் தனது கள்ளக்காதலி வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர்கள் இருவரும் தனிமையில் அங்குஇருந்துள்ளனர்.

இதனை எதேர்ச்சையாக கண்ட அந்த பெண்ணின் மாமனார், இரண்டு பேரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளார். மேலும், கத்தியைக்கொண்டு அவர்கள் இருவரது மூக்கையும் அவர் வெட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கள்ளக்காதல் ஜோடியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அந்த பெண்ணின் மாமனார் உட்பட 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of