அத்துமீறிய மாமனார்..! சத்தம் போட்ட மருமகள்..! இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

895

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள ராகி முத்தஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜு. விவாசயம் செய்து வந்த இவருக்கு அனில் என்ற மகன் உள்ளார். அனில், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவ்வாறு இருக்க அனிலுக்கும், வீணா என்ற பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அனிலும், அவரது மனைவியும், தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்திருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே, மகன்  வேலைக்கு செல்லும் நேரங்களில் நாகராஜு அவரது மருமகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக்கொண்டுடிக்கிறார்.மேலும், அரை குறை ஆடையுடன் ஆபாசமாக நின்றுக்கொண்டு, அத்துமீறியிருக்கிறார்.

இந்நிலையில் சம்பவதன்றும், நாகராஜு, வீணாவிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் பதற்றம் அடைந்த வீணா சத்தம் போட்டுள்ளார். வீணாவின் சத்தம் கேட்டு ஆட்கள் வந்ததைப்பார்த்து, அச்சம் அடைந்த நாகராஜு, அவரை கத்தியை எடுத்து குத்தி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நாகராஜை கைது செய்தனர். காம இச்சைக்காக மருமகளை, மாமனாரே சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of