மகளை கொன்ற தந்தை! கடிதம் மூலம் வெளியான மர்மம்! திருப்பூரில் பரபரப்பு!

719

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழவு அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில், அஹமத் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாய கூலியாக, வேலை செய்து வருபவர் சதீஷ்குமார். இவர் தனது மனைவி தவமணி, மற்றும் மகள் மோனிகாவுடன் (3) அதே தோட்டத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்.

சதீஷ்குமார் கோவை மாவட்டம் கும்பாலபட்டியில் இருந்த போது கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி தர கந்துவட்டிகாரர்கள் தொல்லை தந்ததால் மனமுடைந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார்.

தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரையை விழுங்கிய அவர், மனைவி தவமணிக்கும் கொடுத்துள்ளார். பிறகு, மோனிகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

இதனிடையே, பூச்சி மாத்திரை தாக்கத்தால், சதீஷ்குமார் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த தவமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த அவிநாசிபாளையம் போலிசார் சதீஷ்குமார் எழுதிவைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of