திருமணமாகி 25 நாட்கள் தான்..! மகனை கொலை செய்த தந்தை..! மிரளவைக்கும் காரணம்..!

1073

தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள கோட்டைமேட்டுத் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். 59 வயதாகும் இவருக்கு, 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான மலைச்சாமிக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு தான், ஜோதி என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், மலைச்சாமி தினமும் குடித்து, தனது மனைவி ஜோதியோடு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஜோதி கோபித்துக்கொண்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதேபோன்று சம்பவத்தன்றும், மலைச்சாமி குடித்துவிட்டு வந்து தந்தை தங்கராஜிடம் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இந்த தகராறு முற்றிய நிலையில், தங்கராஜ் தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து மலைச்சாமியின் மனைவி ஜோதி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தங்கராஜை கைது செய்தனர். குடித்துவிட்டு வந்து தகராறு செய்த மகனை தந்தை குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of