17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – தாயின் 2 கணவர் கைது!

3273

திருவாரூர் இலவங்கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பா(35) இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கமலாபுரத்தைச் சேர்ந்த சித்ரா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

சித்ராவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருந்த நிலையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் சின்னாப்பாவிற்கும் சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சிதராவின் மூத்த மகள் அதாவது முதல் கணவனின் மகள் வயது 17 இந்த பெண் குழந்தையை சின்னப்பா அடிக்கடி பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மணமுடைந்த சித்ராவின் மகள் எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த சிறுமி தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுகொண்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து சின்னாப்பாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.