மத்திய இடைக்கால பட்ஜெட் 2019 – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரையும், சிறப்பு அம்சங்களும்

1045

 • பணவீக்க விகிதத்தை 4.4% ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.
 • பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் குடும்பங்களில் 30-40% செலவு கூடியிருக்கும்.
 • 2022ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரும்.
 • பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலை மாறி இப்போது மிகவும் குறைந்துள்ளது.
 • 2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க அரசு பாடுபடும்.
 • கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் விரிவாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 • தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவு அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றி.
 • ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூபாய் 60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
 • பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 • மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 • சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது இந்த அரசின் மிக முக்கிய சாதனையாகும்.
 • கிராம சாலை திட்டத்தை 19,000 கோடி நிதி ஒதுக்கீடு.
 • திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஒரு நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 • 5.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன.
 • மக்களின் கனவுகளை நனவாக்க மத்திய பாஜக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
 • கடந்த ஐந்து ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு 239 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அரசு நிர்வாகத்தில் முற்றிலும் வெளிப்படைத்தன்மை காட்டப்பட்டு வருகிறது.
 • அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நான்காண்டுகளில் 1.54 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
 • இரண்டு விவசாய பொருட்களின் விலை 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 • ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 • வருகிற மார்ச் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.
 • எல்இடி பயன்பாட்டால் ஆண்டுதோறும் ரூபாய் 5 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 43 கோடி எல்இடி விளக்குகள்
  விநியோகிக்கப்பட்டுள்ளன.
 • சிறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் சம்மான் திட்டதின்படி, ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.
 • இதன்மூலம் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவர்.
 • கிசான் கார்டுதாரர்களுக்கு வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.
 • மீன்வளத்துறைக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
 • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
 • 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வருமான உறுதி திட்டம்.
 • கால்நடை மற்றும் மீன் வளர்ப்புத் துறையில் உரிய முறையில் கடனைத் திருப்பி செலுத்துபவர்களுக்கு 3 சதவீதம் வட்டி சலுகை அளிக்கப்படுகிறது.
 • வயதானவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
 • பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 சதவீதம் வட்டி தள்ளுபடி.
 • 12 கோடி சிறு குறு விவசாயிகளுக்கு நிதி வழங்க ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
 • ரயில்வே துறைக்கு முதல் முறையாக ரூ. 65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
 • சினிமா துறையில் பைரசியை தடுக்க புதிய திட்டங்கள்.
 • தேசிய நெடுஞ்சாலைகளை விரைவாக உருவாக்குவதில் இந்தியா முதலிடம்.
 • ஆளில்லா லெவல் கிராசிங்குகள் முற்றிலுமாக அழிக்கப்படும்.
 • நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்திற்கு முதல் முறையாக ரூ. 3 லட்சம் கோடி முதலீடு.
 • ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரே பதவி, ஒரே ஊதியம் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
 • நிதி அறிக்கை இரண்டாவது ஆண்டாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்கப்படுகிறது.