ஜெயலலிதாவின் பிறந்த நாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

214

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறினார்.

மேலும், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி, இனி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தார்.ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கும், வளர்ப்பு பெற்றோருக்கான நிதி உதவி, 2ஆயிரம் ரூபாயில் இருந்து 4ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என கூறினார்.

பெண் குழந்தைகளின் பாலினம் விகிதம் அதிகம் உள்ள 3 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

இதனை தொடர்ந்து, உலமாக்களின் ஓய்வூதியம் ஆயிரத்து500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும், ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்காக சென்னையில் 15 கோடி செலவில் தங்கும் இல்லம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of