கள்ள நோட்டு வைத்திருந்த பெண் கைது

129

கடலூர் பேருந்து நிலையத்தில், 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த பெண்ணை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர், பேருந்து நிலையத்தில் உள்ள சாலையோர கடையில் 34 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சில்லறை மாற்றியுள்ளார். இந்நிலையில், அந்த பெண் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய், கள்ள நோட்டு என்பதை அறிந்த கடையின் முதலாளி, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கள்ள நோட்டு வைத்திருந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் பரணி குமாரி என்பதும், அவரிடம் 200ரூபாய், 500ரூபாய், 2000ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, கைதான பெண்ணிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர.