4 வது முறையாக கருவுற்ற கருவை கலைக்க முயன்ற பெண் உயிரிழப்பு

474

மதுரை அருகே ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், 4 வது முறையாக கருவுற்றதால், கருவை கலைக்க முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரத்தை சேர்ந்தவர் ராமர். இவரின் மனைவி ராமு முத்தாயி. இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் 4 வது முறையாக ராமு முத்தாயி கருவுற்றார்.

4 வதும் பெண் குழந்தையாக இருக்கும் என கருதி லட்சுமி என்ற செவிலியரிடம் 7 மாத கர்ப்பிணி ராமு முத்தாயி கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சையின் போதே ராமு முத்தாயி திடீர் மரணமடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமு முத்தாயின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செவிலியர் லட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ராமு முத்தாயிக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், 4 வது முறையாக கருவுற்றதால், கருவை கலைத்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.