துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் யானை..! பிரேத பரிசோதனையில் வெளியான உண்மை..!

118

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேட்டுப்பாளைய வனச்சரகத்திற்குட்பட்ட தேக்கம்பட்டி அருகே உள்ள விவசாய நிலத்தில் பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில், யானை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யானை கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 3 மாதங்களில் பல்வேறு காரணங்களால் 10க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், வனவிலங்குகள் பலியாவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of