சாத்தான்குளம் வழக்கு..! பெண் காவலர் கைது செய்ய வாய்ப்பு..!

800

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முன்னதாக இவ்வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனர்.

இதனிடையே மதுரையில் சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக பெண் காவலர் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல்நிலைய பெண்  காவலர் முரண்பட்ட தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண் காவலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தந்தை, மகன் கொலை வழக்கில் மாநில மனித உரிமைகள் ஆணையம் மதுரையில் சிறைச்சாலையில் உள்ள 10 காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 10 பேரிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய DSP குமார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை கைதிகளை தாக்கியது ஏன்?, எவ்வாறு தாக்கப்பட்டனர்?, உயிரிழந்தது எப்படி என்பது குறித்து 10 காவலர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெறுகிறது.

Advertisement