பொது கழிவறைக்கு சென்ற பெண்..! உள்ளே நுழைந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!

1427

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் அதிகாலை பெண்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்றனர்.

அப்போது கழிவறையில் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் சிசு ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தலைமை மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மருத்துவர்கள் கழிவறைக்குள் இருந்த சிசுவை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பின்னர் சோதனையில் அந்த சிசு 1.4 கிலோ எடையுள்ள பெண் சிசு என்பது கண்டறியப்பட்டது.

மேலும் இறந்து போன அந்த பெண் சிசு, உள் நோயாளிகள் யாருடையதும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. கழிவறையில் பெண் சிசு இறந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of