CAA-க்கு எதிராக புதுக்கோட்டையில் 4 வது நாளாக போராட்டம்

114

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் 4 வது நாளாக நீடிக்கும் போராட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம், மதர்ஷா பள்ளிவாசல் அருகே போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் இன்று 4 வது நாளாக நீடித்து வருகிறது.

இதில் சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து நீடித்து வரும் இந்த போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவும் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

மேலும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of