ராஜபக்ச vs ரணில் – இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி

722

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ச – ரணில் விக்ரசிங்க தரப்பு எம்.பிக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார்.

இலங்கையில் இரண்டு பிரதமர்கள், இரண்டு சபாநாயகர்கள் என அரசியல் குழப்பம் நிலவியது. புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுடன், ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்தலுக்கும் தடை விதித்தது. இதனை தொடர்ந்து நேற்று கூடிய நாடாளுமன்றத்தில் ராஜபக்ச-வுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதாகவும், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என்று அறிவித்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா அவையை இன்றைக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று அவை கூடிய போது நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என ராஜபக்ச கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்க மறுத்த எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளில் ஈடுபட்டனர். பின்னர் கைலப்பாக மாறி, ராஜபக்ச – ரணில் விக்ரசிங்க தரப்பு எம்.பிக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ராஜபக்ச தரப்பு எம்.பி காயமடைந்தார். மேலும் சபாநாகர் கரு ஜெயசூரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையெடுத்து கரு ஜெயசூரியா அவையை விட்டு வெளியேறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of