அதிமுக பிரமுகரை அடித்து உதைத்த பா.ஜ.க-வினர்

2658

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் பா.ஜ.க சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது அக்கூட்டத்திற்கு குடிபோதையில் வந்ததாக கூறப்படும் திருச்சி தொட்டியம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜா என்பவர், CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மோடியா லேடியா என கோஷங்களை எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க-வினர் ராஜாவை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of