சோபியாவை தரக்குறைவாக பேசி மிரட்டிய தமிழிசை மீது வழக்கு

677

சோபியா மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி மிரட்டிய தமிழிசை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பு நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கந்தன் காலனியில் உள்ள சோஃபியா வீட்டில், மக்கள் கண்காணிப்பு நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் அவரை சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சோஃபியா விமானத்தில் கோஷம் எழுப்பவில்லை என்றும், அவ்வாறு எழுப்பியிருந்தால், விமான ஊழியர்கள் புகார் தெரிவித்திருப்பார்கள் என்று கூறினார்.

சோஃபியாவிடம் பலமணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், 290 மற்றும் 75 சி என இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சோஃபியாவிடம் கையெழுத்து பெற்றதாக கூறினார்.

ஆனால் கையெழுத்து பெற்ற பிறகு, 505 பிரிவு சேர்க்கப்பட்டதாக ஹென்றி டிபேன் குற்றம் சாட்டினார். மேலும் தூத்துக்குடி காவல்துறையினர் சோஃபியாவை மறைமுகமாக மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement