பொது இடத்தில் குப்பையை வீசினால் அபராதம்

186

சென்னை மாநகராட்சியின் சார்பில் தூய்மையான சென்னையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு ஓட்டம் வரும் பிப்ரவரி 2ம் தேதி சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், வீடு வீடாக சென்று குப்பைகளை வாங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என பிரிக்காமல் கொடுத்தாலோ அல்லது குப்பைகளை அவர்களாக எரித்தாலோ கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்தார்.

பொறுப்பில்லாமல் குப்பையை தூக்கி வீசினாலோ, தனிநபர் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டாலும், பொது இடத்தில் குப்கைகளை எரித்தாலும் அபரதாம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of