விளம்பர பலகை : அமைச்சருக்கு அபராதம்

153

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.சீனிவாஸ் யாதவ் சார்பில் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து ஐதராபாதில் பெரிய அளவில் விளம்பர பலகை வைக்கப்பட்டது.

விளம்பரம் குறித்த தகவல் ஐதராபாத் பெருநகர மாநகராட்சியின் மத்திய அமலாக்கத்துறை பிரிவிற்கு சமூக வலைதளம் மூலமாக பொதுமக்கள் தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதால் அமலாக்கத் துறை சார்பில் அமைச்சருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து இ-சலான்’ அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சர் டி.சீனிவாஸ் யாதவ் உடனடியாக அபராதம் செலுத்தியதாக, ஐதராபாத் பெருநகர மாநராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of