தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து பலி எண்ணிக்கை நான்காக உயர்வு

375

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டியில் தனியார் இரும்பு தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது.

இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் வழக்கம் போல் பணிகள் சென்று கொண்டிருந்த போது நேற்று, பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில் 92 சதவீதம் தீ காயம் அடைந்து திவிர சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிதுலாளர் தினேஷ் என்பவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

தொழிலாளர்களை அழைத்து வந்த ஒப்பந்ததாரர் பிண்டு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கவனக்குறைவு, பாதுகாப்பு வசதியின்மை காரணத்தால் விபத்து ஏற்பட்டது என வழக்குப்பதிவு செய்து பெருநகர் போலீசார் தொழிற்சாலை நிர்வாகிகளான சீதாராமன், ராகவேந்திரா, முகமது சேஷ ஷா ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.