மோடியின் பிறந்த நாள் விழா.. திடீரென நடந்த விபரீதம்..

391

சென்னை அம்பத்தூர் அருகேயுள்ள பாடியில் பா.ஜ.க விவசாய அணி சார்பில், பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இரண்டாயிரம் கேஸ் பலூன்களை பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த விவசாய அணியின் துணைத் தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி, அங்கிருந்த கேஸ் நிரப்பிய பலூன்கள் மீது பட்டு வெடித்து சிதறியது.

பலூன்கள் தீப்பற்றி வெடித்து சிதறியதில், அங்கிருந்த13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.