கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் ஆலையில் பரபரப்பு.. 5 பேர் பலி..

665

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்காக கட்டப்படும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் டெர்மினல் கேட் 1 க்குள் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு மள மள வெனபரவியது.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையறிந்த 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தால் பெருந்தொற்று வைரஸ் தடுப்பூசி உற்பத்தி பாதிக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement