விஜய் பட ஷீட்டிங்கில் பயங்கர தீ விபத்து! விஜய்க்கு என்ன ஆச்சு தெரியுமா?

675

தமிழ்திரைப்படங்களின் கிளைமேக்ஸ், பாடல்கள், சண்டைக்காட்சிகள் பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் படமாக்கப்படுவது வழக்கம்.

அந்த வரிசையில் தற்போது விஜயை வைத்து இயக்குநர் அட்லி இயக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு அங்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று பிற்பகலில் அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லட்சக்கணக்கிலான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள், ஜெனரேட்டர் ஆகியவை எரிந்து நாசமாகின.

மேலும், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of