பிரபல ஹீரோ படப்பிடிப்பில் வெடிவிபத்து! சிறுமி உட்பட இருவர் பலி!

937

வி.சமுத்ரா இயக்கத்தில் சிரஞ்சீவி சார்ஜா, சேத்தன் நடிப்பில் ரணம் என்ற கன்னட படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் நேற்று நடைபெற்றது.

அப்போது கார் மோதி தீ பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்ட போது, அங்கிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.இந்த விபத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த ஆயிரா என்ற சிறுமியும், சுமைரா என்ற பெண்ணும் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்து பாகலூர் போலீசார் விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.