கோர தீ விபத்து! 69 பேர் பலி!!

688

வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்று சாவ்க்பஜார். இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி ரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த குடோனில் பிடித்த தீ, பின்னர் மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 69-பேர் பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.