போர்க்கப்பலில் தீ விபத்து, அணைக்கச்சென்ற லெப்டினன்ட் கமாண்டர் பலி

174

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா” விமானம் தாங்கி போர் கப்பல் இன்று பிற்பகல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் துறைமுகத்துக்குள் நுழைந்தபோது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பற்றியது.

அங்கிருந்த உபகரணங்களை வைத்து தீயை போராடி அணைத்தவர்களில் ஒருவரான லெப்டினன்ட் கமாண்டர் டி.எஸ்.சவுகான் பலத்த தீக்காயங்களுடன் அருகாமையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள குழு அமைத்து இந்திய கடற்படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of