கொல்கத்தா மருத்துவமனையில் தீ விபத்து: 200 நோயாளிகள் வெளியேற்றம்

526

கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட இந்த தீயானது,
அவசரகால சிகிச்சைப்பிரிவிலும், மருந்தகப்பிரிவிலும் வேகமாக பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் நகரின் பல்வேறு
பகுதிகளில் இருந்தும் 10 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அங்கு சிகிச்சை பெற்று வந்த 200 நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக
எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள மருத்துவமனையில் கட்டிடத்திலிருந்து அதிகமான புகை வெளியேறுவதாலும்,
கட்டிடத்தின் வெளியே மிகப்பெருமளவில் மக்கள் குவிந்துள்ளதாலும் அப்பகுதி முழுவதும் மிகவும் பதற்றமாக காணப்படுகிறது.

Advertisement