கொல்கத்தா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ-ஐ பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்

303
kolkata

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ-ஐ பல மணி நேரம் போராடி  தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருந்து பிரிவில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவி ஏராளமான பொருட்கள் கருகியதால், புகை மண்டலமாக காட்சியளித்தது.

தகவல் அறிந்து 10 வாகனங்களில் வந்த  தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீவிபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் சிகிச்சைப் பிரிவுகள் எதுவும் இல்லாததால், நோயாளிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் அருகில் உள்ள பகுதிக்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர்.