வனவிலங்குகள் வழிதட முக்கிய கிராமங்களில் பட்டாசு வெடிக்க தடை

374
kerala

கேரளாவில் இருந்து அதிக அளவு வனவிலங்குகள் நீலகிரி முதுமலை காப்பகத்திற்கு இடம்பெயர்ந்து வருவதால், தீபாவளி பண்டிகையின்போது 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி 55 சதவீதம் வனப்பகுதி நிறைந்த மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட பல வகை விலங்குகள் உள்ள நிலையில், தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கர்நாடகா, கேரளா போன்ற வனப்பகுதிகளில் இருந்து ஏராளமான வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது.

இதனால் தீபாவளி காலங்களில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்தால் வனவிலங்குகள் பயந்து ஓடுவதுடன், மனஉளைச்சலுக்கு ஆளாகும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே முதுமலை காப்பகத்தை சுற்றியுள்ள 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.