பட்டாசுக்கு தடையா? இல்லையா? – உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

789

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும், சுவாசக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி, நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை நாடு முழுவதுக்கும் அமல்படுத்தக்கோரி கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கூடாது எனக் கூறி சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மனுவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகை விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் நாளை அளிக்க உள்ள தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement