இந்தியாவில் முதன் முறையாக IAS ஆன பார்வையற்ற பெண்..!

586

பார்வை குறைபாடு உள்ள முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பிராஞ்ஜல் பாட்டில் பதவியேற்றுள்ளார்.

மாகராஷ்டிராவை சேர்ந்தவர் பிராஞ்ஜல் பாட்டில் ஆறாவது வயதில் பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட பிராஞ்ஜல் பாட்டில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

இதைதொடர்ந்து 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட UPSC தேர்வில் வெற்றி பெற்ற பிராஞ்ஜல் பாட்டிலுக்கு, இந்திய ஆட்சிப் பணி கிடைத்தது. இதற்கான பயிற்சியின் போது பிராஞ்ஜல் எர்ணாகுளத்தின் உதவி ஆட்சியராக பணியாற்றினார்.

இந்நிலையில், தற்போது பணி பயிற்சி நிறைவு பெற்றவுடன், பிராஞ்ஜல் பாட்டில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் பணயமர்த்தபடும் பார்வை குறைபாடு உள்ள முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற சாதனையை பிராஞ்ஜல் பாட்டில் படைத்துள்ளார்.