முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் – இஸ்ரேல்

615

இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. ‘பெரிஷீட்’ எனப்படும் இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது.இந்த விண்கலம் தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு ஏவப்படுகிறது.

இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது.இது குறித்து, இஸ்ரேல் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஷ் ஐ.எல்.’ தலைவர் மோரிஸ்கான் கூறியதாவது:-

சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன. தற்போது அதில் நாங்களும் இணைகிறோம்” என்றார்.

இஸ்ரேல் அமெரிக்காவின் ‘நாசா’வுடன் இணைந்து இந்த விண்கலத்தை அனுப்புகிறது. இதில் வீரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of