“ஆலம்பனா”- பூதமாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்….

2358

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான ஃபேன்டஸி திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒரு சில படங்கள் காலம் கடந்தும் இன்று வரை புகழ்பெற்று விளங்குகிறது. 1979ஆம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு தெலுங்கு மொழியிலும் டப் செய்து வெளியானது. இதில் நடிகர் அசோகன் பூதமாக நடித்திருப்பார். அவர் ஒவ்வொரு முறை வரும்போது ஆலம்பனா என சொல்லும் வசனம் பின் பிரபலமானது. அந்த வசனம் இப்பொழுது ஆலம்பனா என்ற பெயரில் ஃபேன்டஸி திரைப்படம் உருவாக அதனை அறிமுக இயக்குனர் பாரி கே விஜய் இயக்குகிறார். டாக்டர் படத்தை தயாரித்திருக்கும் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

நடிகர் வைபவ் இதில் கதாநாயகனாக அலாவுதீன் கதாபாத்திரத்தில் நடித்திருக்க பூதமாக பிரபல காமெடி நடிகர் முனிஸ்காந்த் நடித்துள்ளார். ஆலம்பனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளத்தில் கலக்கி வர அதில் அலாவுதீன் கெட்டப்பில் நடிகர் வைபவ் நாற்காலியில் அரசர் போல கால் மேல் கால் போட்டுக்கொண்டு கையில் விளக்குடன் உட்கார்ந்து கொண்டிருக்க அதற்குப்பின்னால் பூதமாக முனிஸ்காந்த் பூதத்திற்கு உரித்தான சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருக்கிறார்.

Advertisement