முதல் “அப்செட்” – வங்காளதேசத்திடம் வீழ்ந்தது தென்ஆப்பிரிக்கா

406

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச அணியின் தமிம் இக்பால் 16 ரன்னிலும், சவுமியா சர்க்கார் 42 ரன்னிலும் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினர்.

இந்த ஜோடி 142 ரன்கள் சேர்த்தபோது, ஷகிப் அல் ஹசன் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மொகமது மிதுன் 21 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து 331 எடுத்தால் வெற்றி என்ற இலக்காக நிர்ணயித்தது.

இதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 309 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of