சாலையில் வெள்ளம் – மீன்களை பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்

687

மதுரையில் காந்திபுரம் கண்மாய் உடைந்து மழை நீருடன் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் பொதுமக்கள் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் மதுரையில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் காந்திபுரம் கண்மாயை சரியாக தூர்வாரப்படாததால், உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் கண்மாய் நீருடன், மழை நீரும் சேர்ந்து ஓடிய தண்ணீரில் பொதுமக்கள் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.