அந்தமான், தெற்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்

612

அந்தமான் மற்றும் மத்திய, தெற்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கிழக்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா வழியாக, சட்டிஸ்கரை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், அந்தமான் மற்றும் மத்திய, தெற்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of