மீன்பிடி சண்டை – 600 பேர் மீது வழக்குப்பதிவு

295

புதுச்சேரியில் தவளைகுப்பம் பகுதிக்கு உட்பட்ட இரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களிடையே மீன்பிடிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. மோதலை தடுக்க போலீசார் கண்ணீர் புகை வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மோதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகி உள்ளதால் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். மேலும் மோதல் தொடர்பாக இரு கிராமங்களை சேர்ந்த 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement