அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் யாரும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்

105
FISHERMEN

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக, மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், உள் தமிழகத்தில் லேசான மழையும் பெய்யும் என்றும் புவியரசன் கூறினார்.

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று குறிப்பிட்ட அவர், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here