டீசல் விலையேற்றத்தை கண்டித்து மீனவர்கள் இன்று 9 வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

121
fishermen strike

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதால், போதிய மீன்வரத்து இல்லாமல் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், டீசல் விலையும் அதிகரித்ததால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனால் ராமேஸ்வரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் டீசல் விலையேற்றத்தை ரத்து செய்யவும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும், இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்தும் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் 9 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களின் வேலைநிறுத்ததால், இதுவரை 6 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாகை, தஞ்சாவூரிலும் மீனவர்களின் வேலை நிறுத்தம் 5-வது நாளாக நீடித்து வருகிறது. வேலைநிறுத்தம் காரணமாக, பெரும்பாலான மீனவர்கள், தற்காலிக வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here