மீன்வளக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உள்ளிருப்பு போராட்டம்

115

பொன்னேரி மீன்வளக் கல்லூரி மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரியில் தனியார் சுயநிதி மீன்வளக் கல்லூரி தொடங்குவதற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி, பொன்னேரி மீன்வளக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் சுயநிதி கல்லூரி தொடங்கப்பட்டால், பணம் உள்ளவர்கள் சுலபமாக பட்டதினையும், வேலையையும் பெற்று விடுவார்கள் என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்களில் கருப்பு துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.