தாறுமாறாக ஓடிய லாரியால் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

475

கர்நாடகாவில் தாறுமாறாக ஓடிய லாரி சாலையில் சென்றவர்கள் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நேற்றிரவு மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் சென்று கொண்டிருந்த கனரக லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

கட்டுப்பாட்டை இழந்த சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் என பலரது மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of