இப்படியும் விழிப்புணர்வு செய்யலாம்..! அசத்தும் சிறுவன்

247

சிவகங்கையில், தான் சேமித்த பணத்தில் துணிப்பைகள் வாங்கி இலவசமாக விநியோகம் செய்து, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சிறுவனுக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

துபாயில் பணிபுரிந்து வரும் சிவக்குமார் – பொன்மலர் தம்பதியின் மகன் தனுஷ்குமார். அங்குள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான். சிவக்குமார் குடும்பத்தினர் விடுமுறைக்கு தங்களது சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்போது தனது கிராமம் தூய்மையாக இல்லாமல், குப்பை குவியலாக இருப்பதை கண்டு வேதனையடைந்த சிறுவன் தனுஷ்குமார், தனது கிராமத்தை மாற்ற திட்டமிட்டான். அதன் ஒரு பகுதியாக, தனது சேமிப்பில் இருந்து சுமார் 5 ஆயிரம் துணிப் பைகள் வாங்கி, அதனை இலவசமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறான்.

இன்று மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முன்னிலையில் பொதுமக்களுக்கு, துணிப்பைகளை இலவசமாக வழங்கினான். தனது கிராமத்தின் நலனில் அக்கறை காட்டும் சிறுவனின் செயலை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பாராட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of