பெங்களூருவில் விமான விபத்து! இரு விமானிகள் உயிரிழப்பு!

190

பெங்களூருவில், மிரேஜ் 2000 என்ற பயிற்சி போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து இரு பைலட்களும் உயிரிழந்தனர்.

ஹெச்.ஏ.எல், நிறுவனத்தின் மிரேஜ் 2000 என்ற பயிற்சி போர் விமானம் பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, திடீரென தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது.

விபத்தில் விமானத்தில் இருந்த விமானிகளில் இருவரும் உயிரிழந்தனர்.